தொண்டாமுத்தூர் அருகே புளியந்தோப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு

புளியந்தோப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் கடந்த 20ம் தேதி ரங்கசாமி என்பவர் படுகாயமைடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ரங்கசாமி (45) என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியான புளியந்தோப்பு பகுதிக்குஜூன்.20ம் தேதிமாலை சுமார் 7:30 மணி அளவில் சென்றார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் அவர் காயமடைந்தார்.பின்னர் வனப் பணியாளர்கள் ரங்கசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம்கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...