மடத்துக்குளத்தில் 7வது மாநில அளவிலான களரி போட்டியில் பங்கேற்று மாணவர்கள் அசத்தல்

சுவடு முறை, சுருள்வாள் வீச்சுமுறை, வாள்கேடயம் முறை, சுருள் வாள் கேடயம் முறை, வாள் சண்டை முறை, தடி சண்டை முறை உட்பட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகள் பங்கேற்று மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிக்காட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் உள்ள கணியூர் சோழமாதேவி அக்சரா மஹாலில் தமிழ்நாடு களரி அசோசியசன் சார்பில் 7-வது முறையாக மாநில அளவிலான களரி போட்டிகளை மடத்துக்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், டிஎஸ்பி சுகுமாரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்ற மூன்று பிரிவுகளில் சுவடு முறை, சுருள்வாள் வீச்சுமுறை, வாள்கேடயம் முறை, சுருள் வாள் கேடயம் முறை, வாள் சண்டை முறை, தடி சண்டை முறை உட்பட பல்வேறு முறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



5-வயது குழந்தை உட்பட மாணவ, மாணவியர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் சென்னை, ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு திறமைகளை செய்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேசிய அளவிலான களரி போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி மத்திய அரசின் ஊக்கத்தொகை வாங்கி தரப்படும். கோலோ போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கலரி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழக முழுவதும் களரி பயிட்டு போட்டியில் வீரர்களை உருவாக்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு களரி பயிட்டு அசோசியேசன் செயலாளர் வீரமணி தெரிவித்தார்.



திருவனந்தபுரம் இந்தியன் களரி பயிட்டு பெடரேஷன் செயலாளர் வழக்கறிஞர் பூந்துறை சோமன், அக்ஷரா வித்தியா மந்தர் தொடக்கப்பள்ளி இணைச் செயலாளர் சண்முகப்பிரியா, விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, இந்திய சைலாத் சிலம்பம் சங்கம் பொதுச்செயலாளர் குமரி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் சிறுமி உட்பட பலர் பல்வேறு திறமைகளை செய்த நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...