கோவை ஈஷா ஹோம் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீளமேடு அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளதாக கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் பள்ளி மாணவர்கள் நேற்று ஜூன்.21 ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் பீளமேடு அருகே சென்றார்கள்.

அப்போது அங்கு நடந்த விபத்தில் எங்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக மின்னதிர்ச்சிக்கு உள்ளானார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. விசாரணையும் நடைப்பெற்று வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...