பொள்ளாச்சியில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை முயற்சி - காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

கள் விற்பனைக்கு அனுமதிக்கோரி ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இருந்த நிலையில் அதை மையப்படுத்தி பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்ற நிலையில் அதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்.



அப்போது விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...