மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் கெமிக்கல் கலவையால் எழுந்த புகை - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியதன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு அரசு மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

தலைமை மருத்துவர் அருணா குமாரி விரைந்து செயல்பட்டு, தீயனைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.



இதனிடையே தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிலிண்டர்கள் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பின் கழிவறை பகுதியில் பார்த்த போது பிலிசிங் பவுடர், லைசால் இரண்டும் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வயிற்றுப் போக்கால் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி கழிவறைகளை தூய்மை பணியாளர் சுத்தம் செய்து வந்துள்ளார்.

இதை அறியாத நோயாளி ஒருவர் பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் ஊற்றிய தன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு புகை உருவாகி, மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...