மூலனூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு: ஈரோடு எம்.பி. நன்றி தெரிவிப்பு

கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நமது திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அவற்றை முறியடித்து நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் கடைவீதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வருகை புரிந்தார். இந்தநிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நமது திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அவற்றை முறியடித்து நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அதற்கு மிகவும் நன்றி என்றும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முடிந்தவரை நலத்திட்ட உதவிகளை செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துகுமார், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் துரை தமிழரசு, பழனிச்சாமி, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, நஞ்சை தலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவ ராமசாமி, அவைத்தலைவர் மணி என்கின்ற ராமசாமி, மூலனூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...