கோவை 68வது வார்டு காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழா

கோவை மண்டலம் வார்டு எண்.68-ல் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.


Coimbatore:

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், வார்டு எண்.68 காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது சுமார் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.






விழாவில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, கழக நிர்வாகிகள், வட்ட கழக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் சிவா கணேஷ், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பொது மக்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.






இந்த திட்டம் அந்தப் பகுதியின் பொது பாதுகாப்பும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...