தாராபுரம் அருகே செம்மண் கடத்திய இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்..!

தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.


Coimbatore: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தாராபுரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அலங்கியம் அருகில் வட்டமலை புதூர் செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன்,சக்திவேல், நந்தகோபல், சுரேஸ் அவர்களை வைத்து இரண்டு லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் ஒடைத்தனர். தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...