மே 17 இயக்கத்தின் சார்பில் பீளமேட்டில் கோவை மறந்த விடுதலைப் போர் மாநாடு

சுபாஷ் சந்திரபோஸ் பின்னால் இந்தியர்கள் இருந்த பொழுது வெள்ளையர்களுடன் இணைந்து சுபாஷ் சந்திர போஸுக்கு எதிராக ஆட்களை திரட்டி நின்றவர்தான் சாவர்க்கர் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.



கோவை: கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானம் பகுதியில் மே 17 இயக்கத்தின் சார்பில் "கோவை மறந்த விடுதலைப் போர்" என்ற தலைப்பில் வரலாறு மீட்பு மாநாடு நடைபெற்றது.



மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.



பின்னர் இந்நிகழ்வில் உரையாற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், சுதந்திரப் போர் என்பது காந்திக்கு முன்பு இருந்தே துவங்கி விட்டது என்றார். ஆங்கிலேயர்கள் தான் நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சுட்டியதாகவும் குறிப்பிட்டார். இந்து மதம் என்ற ஒரு பெயரே ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு கிடையாது என தெரிவித்தார். கோவையில் கோட்டைமேடு பகுதி திப்பு சுல்தான் கோட்டையாக இருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் அவர்களது வசம் கொண்டு வந்ததாக கூறினார். கோவையில் பலரும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி உள்ளதாகவும், ஹிந்தி இல்லாததால் தான் நம்முடைய மாநிலம் சிறப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார். ஹிந்தி மொழி படித்தவர்கள் ஏன் நம்முடைய மாநிலம் நோக்கி வருகிறார்கள் எனவும், வட மாநில தொழிலாளர்களை நாம் இழிவு படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.

குழந்தை திருமணம் என்பது காந்தி, பெரியார் என அனைவருக்கும் நிகழ்ந்தது எனவும், தற்பொழுது அதன் வயதுஉயர்ந்து விட்டது எனத் தெரிவித்தார்.



பின்னர் உரையாற்றிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கோவை கோட்டைமேட்டில் இருந்த வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என நம் நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் எண்ணியதாகவும், இதற்காக கேரள மாநிலத்திலிருந்து இந்தியர்கள், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள்,இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்ததாக தெரிவித்தார். வெள்ளையர்களை கோவை மட்டுமல்லாமல் தாராபுரம், சத்தியமங்கலம், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாகவும் மருதமலை போன்ற மலைப்பகுதிகளில் இருந்தும் வெள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினார்கள் என கூறினார்.

இங்கு இருக்கக்கூடிய சேட்டு மார்வாடிகள் தமிழர்கள் கடையில் எதையும் வாங்க மாட்டார்கள் எனவும், ஆனால் இஸ்லாமியர்களிடம் எதையும் வாங்க வேண்டாம் என தமிழர்களிடமே கூறுவார்கள் எனவும் கூறினார். தற்பொழுது அனைத்து கட்சியின் தலைவர்களையும் பாஜகவினர் கொண்டாடத் துவங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த தலைவர்களில் சிலர் சாவக்கருக்கு எதிர்த்தவர்கள் என்றார்.மேலும் சுபாஷ் சந்திரபோஸ் பின்னால் இந்தியர்கள் இருந்த பொழுது வெள்ளையர்களுடன் இணைந்து சுபாஷ் சந்திர போஸுக்கு எதிராக ஆட்களை திரட்டி நின்றவர்தான் சாவர்க்கர் என குறிப்பிட்டார்.

நம்முடைய வீர வரலாற்றை எல்லாம் RSS, பாஜகவினர் பேச மாட்டார்கள் எனவும், ஆனால் வீர சாவர்க்கர் என பேசிக்கொண்டே இருப்பார்கள் எனவும் விமர்சித்தார்.

ரூபாய் நோட்டில் இருப்பது காந்தி கண்ணாடி இல்லை, அது சாவர்க்கர் கண்ணாடி என கூறிய அவர், அதனால் தான் இந்திய பணத்தின் மதிப்பு கீழே சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். நீட் தேர்விற்கு ஆதரவாக பேசக்கூடிய அண்ணாமலை எவ்வளவு பணம் வாங்கினார் என்று அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தேசபக்தர்களை காட்டிக்கொடுத்த கூட்டம் தான் ஆர்எஸ்எஸ் என்றார். பாரத் மாதா கி ஜே என்று கூறுபவர்களுக்கு கூட அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்காது எனவும், இது அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்களுக்கெல்லாம் தெரியாது எனவும் கூறினார்.

அனைத்து இந்து கோவில்களையும் இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே அதனை இந்து மதத்தில் உள்ள பிற ஜாதியினர்களுக்கு கொடுத்தால் விட்டு விடுவார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் நல்ல அரசியலில் இருக்க வேண்டும் என்றால் மே 17 இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் தமிழர்களுக்காக போராடலாம் என திருமுருகன்காந்தி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...