கோவை விமான நிலையத்திற்கு வெகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...