கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில், ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன்படி கள்ளக்குறிச்சியில் அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கோவையிலும் அதிமுக சார்பில் இன்று ஜூன்.24 ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



அதன்படி முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...