கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - களிமண் சிலையால் கோவை கலைஞர் விழிப்புணர்வு

குனியமுத்தூரை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை மையப்படுத்தி களிமண்ணில் சிலை ஒன்றை வடிவமைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.



கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசின் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர் அண்மையில் "பாக்கெட் சாராயம் என்ற அரக்கனே உயிரிழப்புக்கு காரணம்" என்ற தலைப்பில் களிமண் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.



களிமண்ணை கொண்டு இறந்தவர்களின் கால்களை கயிறு போட்டு கட்டி இருப்பது போல் சிலையை வடிவமைத்துள்ள அவர், ஒரு காலில் பெண்களின் மாதிரி தாலியும், மற்றொரு காலில் குங்கும பொட்டையும் வைத்து இரு கால்களை இணைத்து கட்டும் கயிற்றில் மாதிரி சாராய பாக்கெட்டை கட்டி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், குடும்பத்திற்காக வாழ வேண்டுமெனவும், சுயநலத்திற்காகவும், தனது இன்பத்திற்காகவும் மது அருந்த கூடாது என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...