கோவையில் இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழக முதலமைச்சர், திமுக கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தலைமையில், இல்லந்தோறும் இளைஞர் அணி "உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று (24-6-2024), திங்கட்கிழமை காலை, பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் மேற்பார்வையில், பீளமேடு பகுதி-2 செயலாளர் நாகராஜ் தலைமையில் 28வது வட்டக் கழகச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், க.மணிகண்டன், கோவை அருண்,துரைபிரவீண், இப்னு மசூது, வட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஜே.தாஸ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...