கூலி உயர்வு வழங்க கோரி உடுமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப்பணியாளர்கள்

கூலி உயர்வு வழங்கக்கோரி உடுமலை நகராட்சி அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகையிட்டனர். தூய்மை பணிகளுக்கான உபகரணங்களும் வழங்குவதில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வாங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வீதி வீதியாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் தரப்பில் ஊதியம் குறைத்து வழங்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்து எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பணியாளர்கள் இன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றோம். ஆனாலும் குறைந்த அளவே ஊதியம் வழங்குகின்றனர். இதனால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

பி.எப் தொகையும் வழங்குவதில்லை. ஊதியத்தை சேர்த்து தருமாறு கேட்டால் மேஸ்திரி, மேற்பார்வையாளர், ஆய்வாளர் உள்ளிட்டோர் வேலையை விட்டு செல்லுமாறு அச்சுறுத்துகின்றனர். எங்களது குறைகளை நிவர்த்தி செய்யாமல் கொத்தடிமைகளாக வைத்து உள்ளனர். தூய்மை பணிகளுக்கான உபகரணங்களும் வழங்குவதில்லை. நகரை தூய்மையாக வைத்து ஆரோக்கியத்தை ஈட்டி தருகின்ற எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ரூ.600 ஊதியத்தை முழுமையான அளிக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம் என்றனர். இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...