துடியலூர் அருகே புலவர் நாவுக்கரசர் நஞ்சப்பன் எழுதிய ஓடை நதியானது என்ற நூல் வெளியீட்டு விழா

கோவையைச் சேர்ந்த தமிழமது அறக்கட்டளை புலவர் நாவுக்கரசர் நஞ்சப்பன் எழுதிய ஓடை நதியானது என்ற நூலை, கௌரவ மடாலயம் சிறவையாதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் பங்கேற்று வெளியிட்டார்.



கோவை: பறந்த தமிழில் விரிந்த புலமை உடைய கோவையைச் சேர்ந்த தமிழமது அறக்கட்டளை புலவர் நாவுக்கரசர் நஞ்சப்பன் ஓடை நதியானது என்ற நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கோவை துடியலூர் அருகே உள்ள கிருஷ்ணா திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது. பாவலர் ஆறுமுகம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிவக்குமார் மற்றும் பரசுராமன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.



தமிழமுது அறக்கட்டளை செயலர் புலவர் துறை தில்லான், சிறு தெய்வ வழிபாடு ஆய்வாளர் முனைவர் வேதநாயகம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கௌரவ மடாலயம் சிறவையாதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் தலைமை வகித்து ஓடை நதியானது நூலை வெளியிட்டார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, தொழிலதிபர் ஆறுமுகசாமி, அனைத்திந்திய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரைசாமி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் தண்டபாணி, குமரன் கலை அறிவியல் கல்லூரி தலைவர் அம்மா செய்யப்பன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.



தொடர்ந்து நூலும் நூலாசிரியரும் என்ற தலைப்பில் தமிழ் அமுது அறக்கட்டளை பொருளாளர் புலவர் அருணா பொன்னுசாமி, புது வெள்ளம் சிற்றிதழ் ஆசிரியர் ராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருத்தாளர் பொன்னுசாமி சின்னத்தம்பி, புலவர் சந்தன மூர்த்தி கவின், புதூர் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் கணேசன், சிங்கைதமிழ் சங்கம் மாறப்பன் புலவர் சண்முகம், இரா.சண்முகம் ஜெகநாதன், கோவை தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் இள மணி, மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து நூல் ஆசிரியர் புலவர் சூ நஞ்சப்பன் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி இறுதியாக புலவர் கோனையின் நன்றியுரை வாசித்தார் இந்நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் முனியாண்டி தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கோவை மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், சரவணன், மஞ்சு முத்து, சுப்பிரமணியம், குறுந்தா சலம், சுவாமிநாதன், கல்யாணசுந்தரம், குமாரசாமி, விசாகமூர்த்தி, செல்வராசு, முத்தமிழன், ரங்கசாமி, தாமோதர சாமி, செல்லமுத்து, விவேகானந்தன், அருள் சிவா, கவியரசு, ராஜேந்திரன், நாராயணசாமி உள்ளிட்ட பல தமிழாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...