ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத் தரக் கோரி நிலத்தின் உரிமையாளர் கோவை ஆட்சியரிடம் மனு

பழங்குடியின மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அமெரிக்கா கவுண்டர்(எ) முத்துச்சாமி கவுண்டர். இவருக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நிலம் 1990களில் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தை அங்கு வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்கும் படி முத்துச்சாமி கவுண்டர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு பழங்குடியின மக்களிடமே தரும்படியும் முத்துச்சாமி கவுண்டரின் மகள் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் அந்த இடத்தை அங்குள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு கொடுப்பதற்காக அரசிடம் கொடுத்த நிலையில், தற்போது ஈஷா நிர்வாகம் அதனை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிலம் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிலையில் அங்கு ஈஷாவினர் அவர்களது தேவைக்கு பயன்படுத்தி வருவதாக கூறினார். அந்த நிலத்திற்காக அனைத்து மூல பத்திர ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார். மேலும் அங்கு கட்டப்படும் மின் மயானம் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையே இல்லை எனவும், இவர்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் எனக் கூறினார்.

அதே போல் செம்மேடு பகுதியை சேர்ந்த குளத்தேரி பழங்குடி மக்கள் தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தில் ஈஷா நிர்வாகம் மின் வேலி அமைத்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டுமென மனு அளித்தனர். அதே சமயம் தங்களுக்கு மின் தகன மேடையும் தேவையில்லை எனவும், தாங்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...