கோவை கோட்டைமேட்டில் ஊருக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோட்டைமேட்டில் சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் மீது ஏறி குரங்கு ஒன்று சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அவ்வப்போது குரங்குகள் கோவை வீதிகளுக்குள் புகுந்து அங்குமிங்கும் தாவி பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வருகின்றன.

இந்தநிலையில், இன்று (ஜூன்.24) உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று நுழைந்தது. அந்தக் குரங்கு சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது ஏறி சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை விரைந்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...