அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு

தன்னைப்பற்றி உண்மைக்கு மாறான பொய்யான தகவலை கூறியதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நீங்கள் ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்வி கேட்கலாமா? ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒருங்கிணைப்பு குழுவா? கோவையை சேர்ந்த ஒருவர் (கே.சி.பழனிசாமி) ஓபிஎஸ் காலத்தில் தான் அதிமுக கட்சியில் உறுப்பினராகவே சேர்ந்தார். உங்களுக்கு விவாத மேடைக்கு ஒரு ஆள் தேவை. அதனால் அவரை வைத்துள்ளீர்கள் என பேசி இருந்தார்.



இந்த விவகாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இன்று ஜூன்.24 கோவை ஜேஎம்எண் 1 நீதிமன்றத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கே.சி.பழனிசாமி கூறுகையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி உண்மைக்கு மாறான பொய்யான தகவலை கூறி வருகிறார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...