வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்

மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில், ஆற்றில் குளிக்கவும்,தண்ணீரில் இறங்கி விளையாடவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.



கூழாங்கள் ஆறு மற்றும் நல்லகாத்து ஆறு, நடுமலை ஆறு, வெள்ளம் மலை டானல், கெஜமுடி ஆறு, சோலையார் பிர்லா பால்ஸ், சோலையார் அணை ஆறு, கருமலை இறைச்சிப்பாறை ஆறு, போன்ற ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் குறைவான மழை பெய்யும் பொழுது, வனப்பகுதியில் அதிகமான மழை பெய்யும். இதனால் ஆற்றில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்படும். தண்ணீரில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்வார்கள் என்று இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் இறங்க குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



இத்த தடைகளை மீறி கூழாங்கல் ஆற்றில் காவல்துறை இல்லாத சூழ்நிலையில், சட்ட விரோதமாக அப்பகுதிகளில் கடைகளை நடத்தக்கூடிய வியாபாரிகள், வியாபார நோக்கத்தோடு சுற்றுலாப் பயணிகளை ஆற்றில் இறங்கி குளிக்க மற்றும் விளையாடுவதற்கு அனுமதிக்கிறார்கள் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஆபத்தை உணராமல் குளிப்பதால் திடீர் வெள்ளம் பெருக்கு வந்தால் என்ன செய்வது என்று அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்றும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள் மட்டும் கடைகளை வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொண்டனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...