கோவையில் வளர்ச்சி திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு

சங்கனூர் பள்ளம் மேம்படுத்தும் பணி, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள், பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடம் ஆகிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு நடத்தினார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட கண்ணப்பன் நகர், காந்திபுரம் 7-வது வீதி தொடர்ச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சங்கனூர் பள்ளம் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் எதிர்புறம் கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி நோக்கி செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மத்திய மண்டலத்தலைவர் மீனாலோகு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை தலைமை பொறியாளர் முருகேசன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, இளங்கோவன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...