கோவை தெற்கு உக்கடத்தில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த லாரி டிரைவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அப்துல் ஜெயில் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2.250 கி.கிராம் உயர் ரக போதை பொருள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கடை வீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று ஜூன்.24 அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அப்துல் ஜெயில்(36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 2.250 கி.கிராம் உயர் ரக போதை பொருள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...