கோவை ஆர்.எஸ்.புரத்தில் கல்விசார் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும், திறனும் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல், இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தனித்திறனை மேம்படுத்திட இசைக்கருவிகள் வாசித்தல் பயிற்சி வழங்குதல் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்விசார் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் (Extra Curricular Activities) மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (25.06.2024) நடைபெற்றது

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 83 ஆரம்பப் பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அந்தவகையில் மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டு வரவு, செலவு திட்டத்தின் அறிவிப்பின்படி, மேற்காணும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும், திறனும் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல், இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தனித்திறனை மேம்படுத்திட இசைக்கருவிகள் வாசித்தல் பயிற்சி வழங்குதல், ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தும் வகையில் உரிய பயிற்சி வழங்குதல், தொழிற்சாலைகளை பார்வையிடுதல், உளவியல் ஆலோசனை வழங்குதல் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ. மாணவியரிடையே ஊடாடும் கற்றல் திறனை (Interactive Learning) மேம்படுத்துவது தொடர்பாகவும், நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேற்பார்வையாளர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.



தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மேற்காணும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக, இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் வெண்கல பதக்கம் பெற்ற அனுப்பர்பாளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் P.M.நளன், வெற்றி பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாநகராட்சி ஆணையாளரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், மாணவரிடம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பாராட்டு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...