கத்திக்குத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் புகைப்படம் பகிர்வு – கோவை ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார்

பெண்ணை அழைத்து செல்ல வந்த சித்தப்பாவை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த கால் டேக்சி ஓட்டுநர் காயமடைந்தார். இதில் உயிரிழந்தவருக்கு பதில் தன்னுடைய புகைப்படத்தை வைத்து ஊடகங்களில் பகிரப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கால் டாக்சி ஓட்டுநர் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன், 20 வயதான இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துள்ளார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர பெண்ணை கண்டித்துள்ளனர்.



இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி மிதுன், ஹர்சினியை அழைத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. ஹர்சினி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்சினியின் சித்தப்பா மணிகண்டன், மிதுனின் செல்போனுக்கு அழைத்து கேட்டுள்ளார். அப்போது தான் கணுவாய் பகுதியில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன் ஹர்சினியின் அண்ணன் ஆதித்யா மற்றும் ரெட் டேக்சியில் டிரைவாக வேலை செய்து வரும் காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் செல்வகணபதி என்பருடன் கால் டேக்சியை எடுத்துக் கொண்டு தேடிச் சென்றுள்ளனர்.



அங்கு காணாததால் மீண்டும் மிதுனை அழைத்த போது வெவ்வேறு இடங்களைச் சொல்லி அலைக்கழித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுப்பிரமணியம், பாளையம் கே.என்.ஜி. புதூர் சாலையில் செல்லும் போது அங்கிருந்த பேக்கரி எதிரே சாலை ஓரமாக மிதுன், அவரது நண்பர் பிரகாஷ் மற்றும் ஆட்டோ டிரைவர் முத்து ஆகிய மூவரும் நின்று கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை பார்த்து மணிகண்டன் தனது அண்ணன் மகள் ஹர்ஷினியை எங்கே உள்ளார் என கேட்டு அவர்களுடன் வாக்கு வாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மிதுன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் இடது மார்பு மற்றும் இடது கை தோல்பட்டையில் குத்தியுள்ளார். தடுக்க சென்ற ரெட் டாக்ஸி ஓட்டுநர் செல்வகணபதியின் வயிற்று பகுதியில் குத்திவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.



இதையடுத்து காயமடைந்த செல்வகணபதி போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் அங்கிருந்தவர்கள் மணிகண்டனை கோவை கங்கா மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் கொண்டுசென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

மேலும் காயமடைந்த ரெட் டாக்ஸி ஓட்டுநரான செல்வகணபதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும்தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த மணிகண்டன் என கால்டேக்சி ஓட்டுநர் செல்வகணபதியின் புகைப்படத்தை பயன்படுத்தி தான் இறந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாவதாவதாகவும், இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...