கோவை வஉசி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், காப்பகங்களில் வாழும் குழந்தைகள் கண்டுகளிப்பு

பொருட்காட்சிக்கு வந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், காப்பகங்களில் வாழும் குழந்தைகள், 27 அரசு துறைகள், 7 அரசு சார்பு நிறுவனங்கள் என 34 அரங்குகளை பார்வையிட்டனர். பின்னர், ராட்டினம், ஜெயின்ட் வீல் ஆகியவற்றை விளையாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை வஉசி மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பகங்களில் வாழும் குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.



இவர்களுக்கு எந்த விதமான கட்டணம் இல்லாமல் இலவசமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு பொருட்காட்சியில் இருக்கும் 27 அரசு துறைகள், 7 அரசு சார்பு நிறுவனங்கள் என 34 அரங்குகளை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய பொழுதுபோக்கான ராட்டினம், ஜெயின்ட் வீல் ஆஇயவற்றை இலவசமாக விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்த Snow World-யில் பனிப்பொழிவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியாக நடனமாடி அசத்தினர்.



4-வது ஆண்டாக கோவை பொருட்காட்சி வியாபாரிகள், அரங்க உரிமையாளர்கள், கேளிக்கை பகுதி உரிமையாளர்கள், ஃபுட் கோர்ட் உரிமையாளர்கள் ஆகியோர் இவர்களுக்கு ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவுகள் இலவசமாக வழங்கினர்.



மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதரவற்ற காப்பகத்தில் இருப்பதால் எந்த விதமான மகிழ்ச்சி அடையாமல் இருக்கின்றனர். அதனால் இதுபோல பொருட்காட்சிக்கு அழைத்து வந்து இவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ரபீக் தெரிவித்தார்.



காப்பகத்தில் உள்ளே நான்கு சுவர்களில் சுற்றி வந்தவர்களுக்கு, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...