கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி

உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கு கோவை ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.


கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்தி குமார்பாடி தலைமையில் நேற்று ஜூன்.25 நடைபெற்றது.

நாட்டில் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், பாலின விகிதாசாரத்தை சமன்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டதே பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்.

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுக்கான விருதை கோவை மாவட்டம் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவா்கள் அதிக அளவில் உள்ளனா். அப்படியிருந்தும் வட்டார அளவில் பாலின விகிதாசாரம் குறைந்து காணப்படுகிறது. பெண் குழந்தைகளை கருவில் கொல்லும் அபாயத்தைத் தடுப்பதற்காக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும்.

கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை அறிவித்தாலும், அதனை முறையாக கடைப்பிடிப்பது மருத்துவா்கள் மற்றும் ஸ்கேன் மையங்களின் கடமையாகும். எனவே, உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்

இந்தப் பயிற்சியில் சுகாதரத் துறை இணை இயக்குநா் ராஜசேகரன், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுப் பயிற்சி) வளா்மதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...