இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதுபற்றி கூறிய கிராம மக்கள், கடந்த சில வருடங்களாகவே இலவச வீட்டு மனை இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் இன்று நடைபெறும் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் மனு வழங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வீடு இல்லாதமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, வரதராஜபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...