துர்கா ஸ்டாலின் சகோதரருக்கு தமிழக அரசு முக்கிய பதவி - மருத்துவ பணிகள் இயக்குனராக நியமனம்

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த துர்கா ஸ்டாலின் சகோதரர் ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: துர்கா ஸ்டாலின் சகோதரரும், மருத்துவருமான ஜெ.ராஜமூர்த்தி டி.எம்.எஸ் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார்.

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளையும் கட்டுப்படுத்தி பொறுப்பு வகிப்பார். இதுவரை டி.எம்.எஸ் ஆக இருந்து வந்த டாக்டர் ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இவர் வகித்து வந்த டி.எம்.எஸ் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...