கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஏசுதாஸ் என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல் இன்று அவர் உயிரிழந்துவிட்டார்.


கோவை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (35) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் விஷசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

விஷச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...