அதிமுக ஆட்சியில் போட்டப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை - கோவை நீதிமன்றம் உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து (27.8.2019) அன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு விசாரணை கோவை JM.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூன்.26) நடைபெற்ற நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மு.முத்துசாமி, தென்றல் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன், கூடலூர் நகரமன்ற தலைவர் அறிவரசு, கவுண்டம்பாளையம் முன்னாள் பகுதி செயலாளர் மதியழகன், வீரபாண்டி கார்த்தி, காங்கிரஸ் கட்சயைச் சார்ந்த குனிசை செல்வம், சி.பி.எம், நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த முகமதுஅலி உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது கழக மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி மற்றும் கழக வழக்கறிஞர்கள் குழுவும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...