பருத்தி கையிருப்பை விற்கக் கூடாது - மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கோவை தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் கடிதம்

ஜூலை 1ஆம் தேதி முதல் எம்எஸ்எம்இ ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு விற்பனையாகாத பருத்தி இருப்புகளை பராமரித்து நூற்பாலை ஆலைகளுக்கு வழங்க மத்திய ஜவுளித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: கோவை தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேசன் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நிதி நெருக்கடியில் எண்ணற்ற ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டு உள்ளதாகவும், சமீபகாலமாக ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பால் பல ஆலைகள் மீண்டும் துவங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய பருத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், இந்த நிலையில் 24 லட்சம் பேல் பருத்தி விலை வணிகர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சிசிஐ., தவிர்க்க வேண்டும் எனவும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு நூற்பாலைகளுக்கு விற்பனைக்கு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள சிஸ்பா, நான்கு மாதங்களுக்கு முன் பருத்தியின் விலை திடீரென ஒரு கேண்டிக்கு 58 ஆயிரம் ரூபாயிலிருந்து 63 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது எனவும், அப்போது வியாபாரிகளுக்கு பருத்தி விற்பனை செய்ய வேண்டாம் என மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் சிசிஐ., யிடம் கோரிக்கை விடுத்ததாகவும், தங்களின் கோரிக்கை அடிப்படையில் ஜவுளி அமைச்சகம் பருத்தியை வணிகர்களுக்கு விற்க வேண்டாம் என்று சிசிஐ அறிவுறுத்தியதாகவும், சிசிஐ பருத்தி வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்தியதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.

இதனால் பருத்தி விலை உடனடியாக குறைந்து ஒரு கேண்டிக்கு ஒரு ரூ.57,000 க்கு கடந்த நான்கு மாதங்களாக நிலையாக இருந்ததாகவும், சிசிஐ., விலைகள் ஒரு அளவுகோலாக செயல்பட்டதால் வெளிச்சந்தையில் பருத்தியின் விலையும் நிலையானதாக இருந்தது எனவும் சிசிஐ., வணிகர்களுக்கு விற்பனையை மீண்டும் தொடங்கினால் விலை மீண்டும் உயரும். ஆகவே ஜூலை 1ஆம் தேதி முதல் எம் எஸ்எம்இ ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு விற்பனையாகாத பருத்தி இருப்புகளை பராமரித்து நூற்பாலை ஆலைகளுக்கு வழங்க மத்திய ஜவுளித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...