மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறப்பு

தற்போது மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மத்தம்பாளையம், அம்பேத்கர் நகரில், காரமடையைச் சேர்ந்த 108 குழுவினருக்கு நேற்று ஜூன்.26 பிரசவ வழி என்று அழைப்பு வந்தது.

23 வயதான கர்ப்பிணி பெண் சௌமியா மிகவும் பிரசவ வழியுடன் இருப்பதை உணர்ந்து ஆம்புலன்ஸ் குழு உடனே அவர்களை ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.



பின் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் அருண் ஆகியோர் மழையின் போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சௌமியாவை மேட்டுப்பாளையம் ஜிஹெச்க்கு ஏற்றிச் செல்லும் வழியில் மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் வைத்து பிரசவத்தில் ஈடுபட்டனர். அப்போது சௌமியாக்கு அழகான ஆண் குழந்தை ஆம்புலன்ஸில் பிறந்தது.



மழையின் போது ஆம்புலன்சுக்குள் பிரசவத்தை கையாண்ட குழுவினர் பொதுமக்களால் பாராட்டப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...