கோவை மத்திப்பாளையத்தில் திமுக சார்பில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் 40 கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டப்பட்டது.

இதன் துவக்கமாக பஞ்சமி நாளை முன்னிட்டு கோவை தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறியதாவது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி வழிகாட்டுதல்படி முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு விழா மற்றும் தமிழக முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதையும், மேலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கழத்தையும் வழி நடத்திடவும், தமிழக மக்களின் நிரந்திர முதல்வராக பணியாற்றிட வேண்டியும்,அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வேண்டி 40 திருக்கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருந்தோம்.

இதன் தொடக்க விழாவாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி துவக்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை சார்கார்சாமகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவிலில் தொடர்ந்து 7 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 40 கோவில்களில் அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தெரிவித்தார்.

இந்த அன்னதான விழா தொடங்குவதற்கு முன் ஶ்ரீ விஸ்ணு மாய திருக்கோவில் சுவாமிகள் அஸ்வின் யாக பூஜை நடத்திட, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனையை இக்கோவில் சுவாமிகள் இராஜேந்திரன் செய்தார். இந்த விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிடர், சிவபக்தர், காளி உபாசகர் சிவகுருநாதன் செய்தார். இந்த விழாவில் பக்தர்கள், பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...