கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.06.2024 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மேலும், மாநகராட்சி ஆணையாளர், ஒண்டிபுதூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மாநகர் அருகில் அமைந்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கு (FCI Godown) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62க்குட்பட்ட கொங்கு நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய திட்டப்பணிகள் அமைப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கிழக்கு மண்டலம் ஒண்டிபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் திருச்சி சாலை இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், உதவி ஆணையர்கள் கவிதா, செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, ராஜேஸ்கண்ணா, எழில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள், உணவு தானிய சேமிப்பு கிடங்கு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...