கோவை மாநகராட்சியை கண்டித்து அதிகார குரல் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், துலக்குனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அதிகார குரல் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாடா பாத் அருகே, 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாநகாராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். அனைத்து தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...