கோவை குரும்பபாளையத்தில் எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் - சிறுவன் உட்பட 6 பேர் கைது

எஸ்.என்.எஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை, குரும்பபாளையத்தில எஸ்.என்.எஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே உள்ள விடுதிகள் மற்றும் வீடுகள் எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் அறையில் தங்கி இருக்கும் சக மாணவர்கள் சிலர், அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன் பிரவீன் என்பவரின் செல்போனை அண்மையில் பறித்தனர்.

இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தீபக் என்ற மாணவர், அந்த கல்லூரியில் தொடர்பு இல்லாத வெளி ஆட்களை அழைத்து வந்து வெற்றிவேல் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி மிரட்டினர்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் அறைக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டி கொண்டனர். சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது. பின் இது குறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களை தாக்கியது கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப், வரதரயங்கா பாளையம் ஜெர்மன் ராகேஷ், காபி கடை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், அன்னூர் கணேசபுரம் ராகுல், தீபக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. பின் போலீசார் அவர்களை நேற்று ஜூன்.26 கைது செய்தனர். மேலும் ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...