கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பு போக்குவரத்தை சரி செய்த மருத்துவர் பக்தவச்சலம்

கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் உயர் மேம்பாலங்களில் பணி நடைபெற்று வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை பந்தையசாலை மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலைகளில், மருத்துவமனை, நீதிமன்றம், திரையரங்கம், கல்லூரி மற்றும் பள்ளிகள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜூன்.27 அச்சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த பின்பு பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.

மருத்துவரின் இச்செயல் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதுடன் மருத்துவர் போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...