கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா

தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, கௌரவ கர்னல் பதவி சின்னத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.


கோவை: தேசிய மாணவர் படை சார்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று ஜூன்.27 பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு, மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் முனைவர் கீதாலட்சுமி ஆற்றிய தொண்டை போற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ கர்னல் பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 ஆம் ஆண்டு துணைவேந்தராக நான் இந்த பெருமையை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பதவியை பெரும் நான்காவது துணைவேந்தராக நான் உள்ளதாகவும், மேலும் இந்தியாவிலேயே அதிக கவுரவ பதவி சின்னத்தை பெரும் முதல் பெண்ணாக நான் இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பதவிக்கு ஏற்ப தன்னால் இந்திய மாணவர்களுக்கு என்னென்ன நற்பண்புகளை பறைசாற்ற முடியுமோ நிச்சயம் அதை அவர்களுக்காக செய்வேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...