எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த கோவை நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன், வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சாலையில் நடந்து செல்வோரெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்றும், ஓ.பன்னீா்செல்வம் காலத்தில் அதிமுகவில் சோ்ந்த கோவையைச் சோ்ந்தவா் அந்தக் குழுவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னைக் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கோவை முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று ஜூன்.27 விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மீதான விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...