கோவையில் நில அளவைத் துறையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி - 2 பேர் கைது

கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமார் (39). இவா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அனுமதியின்றி பயன்படுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட மோசடிகளில் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் செளரிபாளையத்தைச் சோ்ந்த அருண் பிரதாப் (43), ஆட்சியா் அலுவலகத்தில் கணினிப் பிரிவில் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோரை போலீஸார் நேற்று ஜூன்.27 கைது செய்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...