போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - திவான்சபுதூரில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திவான்சபுதூரில், வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தமிழ்நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.


கோவை: ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 அன்று, “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத வர்த்தக எதிர்ப்பு தினம்”, இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் மற்றும் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் குடும்ப நலத்தில் அதன் தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.



இந்த நாளை நினைவுகூர்ந்து, பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஜூன் 26, 2024 அன்று, திவான்சபுதூரில் தமிழ் நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து "விழிப்புணர்வு பேரணி" ஒன்றை ஏற்பாடு செய்தனர்.



இந்த பேரணியை சிறப்பு துணை ஆய்வாளர் சமுத்திரபாண்டியன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் G. தாமோதரன், முனைவர் N. நவீனா, முனைவர் H. சங்கரராமன் மற்றும் துணை ஆய்வாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் இந்த பேரணியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...