பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதன் வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார், அரிமா.ஸ்ரீமான் சுந்தரம், Loin.நெடுமாறன், Loin.தியாகராஜன், வெங்கடேஷ், S.பாபு, தமிழ்நாடு காவல் துறை, TN CREATOR MEMBERS லோகேஸ்ராம், நிர்மல், அஷ்வின், சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். விழாவில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டன.

இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் உணர்வை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கை சார் ஆட்சியர் வலியுறுத்தினார். நமது இயற்கை வளங்களை பாதுகாக்க கூட்டு முயற்சியின் அவசியத்தை டிஎஸ்பி எடுத்துரைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் உ.சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...