கோவையில் அறிமுகம்: ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் நவீன கழிப்பறைகள்

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நகரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளின் அறிமுகம் குறித்து விளக்கமளித்தார்.




கோவை மாநகராட்சியில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பொது கழிப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது: "நமது மாநகராட்சியில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு முக்கிய அங்கமாக, நாங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கழிப்பறைகளில் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்."



"முதற்கட்டமாக, 3,000 முதல் 5,000 பேர் வரை கூடும் இடங்களில் உள்ள ஐந்து கழிப்பறைகளை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த கழிப்பறைகளில் யாராலும் சேதப்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பொருத்தி சோதனை செய்து வருகிறோம். இந்த ஐந்து கழிப்பறைகளில் ஐந்து வித புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.



இந்த புதிய சேவைகள் குறித்து விளக்கமளித்த ஆணையாளர், "முதலாவதாக, 'பீப்பிள் கவுண்டிங் சிஸ்டம்' என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது கழிப்பறையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடும். இதன் மூலம் எந்த நேரத்தில் அதிக மக்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள், எப்போது கழிப்பறையை பயன்படுத்துவது கடினமாக உள்ளது போன்ற தகவல்களை நாங்கள் பெற முடியும்," என்றார்.



தண்ணீர் பிரச்சனையை தீர்க்க இரண்டு முக்கிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். "ஆட்டோமேட்டிக் பம்பிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலிங் சிஸ்டம் ஆகியவை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுகின்றன. இவை தண்ணீர் இல்லாத நேரங்களில் தானாகவே தண்ணீரை நிரப்புவதோடு, மோட்டார் பழுது மற்றும் மின்தடை போன்ற பிரச்சனைகளையும் உடனடியாக அறிவிக்கும் திறன் கொண்டவை. மின்தடை நேரங்களில் கனரக வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்புவதற்கு இவை உதவியாக உள்ளன," என்று விளக்கினார்.



மேலும், கழிப்பறை சுத்தம் தொடர்பான அம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார். "கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுக்க 'ஆர்டர் கண்ட்ரோல் டிவைஸ்' என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக 10 வகையான கருத்துகளை உள்ளடக்கிய 'ஃபீட்பேக் சிஸ்டம்' ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் கழிப்பறை சேவையை மேம்படுத்த பெரிதும் உதவும்," என்றார்.



இத்திட்டத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆணையாளர் தெரிவித்தார். "அடுத்த கட்டமாக 22 கழிப்பறைகளில் இந்த சேவைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இறுதியாக, மாநகராட்சியின் அனைத்து கழிப்பறைகளிலும் இந்த நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மற்ற நகரங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...