உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் சூலூர் மக்களின் குறைகளை ஜூலை 18,19-ல் கேட்க உள்ளார்-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம்.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் மாதந்தோறும் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு வட்டத்துக்கு பொதுமக்களைத் தேடிச்சென்று இரவில் அங்கேயே தங்கியிருந்து அவா்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் இந்தத் திட்டம், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி ஜூலை 18- ஆம் தேதி காலை 9 மணி முதல் 19- ஆம் தேதி காலை 9 மணி வரை சூலூா் வட்டத்திலேயே ஆட்சியா் முதல் முக்கிய அதிகாரிகள் அனைவரும் தங்கியிருந்து கள ஆய்வுகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்களின் குறைகளைக் கேட்க உள்ளனா்.

சூலூா் வட்டத்தில் உள்ள 41 கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், 5 பேரூராட்சி அலுவலகங்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம், 2 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அதிகாரிகள் 18- ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை மனுக்கள் பெறுகின்றனா்.

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...