கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: சூலூர் பீடம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 3) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மேம்பாலப் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஒப்பந்ததாரர் மீது மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.



கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் நோக்கம், ஊரகப் பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதாகும். குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பீடம்பள்ளியில் ஒரு பயனாளியும், பட்டணத்தில் 3 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பீடம்பள்ளி ஊராட்சி, நடுப்பாளையம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முருகன், சரஸ்வதி, தங்கம்மாள் ஆகியோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இடம் தேர்வு தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...