சேலம் ரயில்வே கோட்டத்தில் முறையற்ற பயணிகளிடம் ரூ.5.88 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்த 42,823 பேரிடமிருந்து ரூ.3.62 கோடியும், முறையற்ற பயணம் செய்த 36,619 பேரிடமிருந்து ரூ.2.25 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் முறையற்ற பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ.5 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 813 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 42 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல, ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 36 ஆயிரத்து 619 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 33 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ற 83 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 801 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...