கோவை மத்திய மண்டலத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வார்டு 48இல் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட அவினாசி சாலையில், ஜி.பி.சிக்னல் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (04.07.2024) மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆணையாளருடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இத்திட்டம் நிறைவடைந்தால், வார்டு 48இல் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...