கோவை பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்குட்பட்ட பீளமேடு, அண்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் (TURIP) 2024-25ன் கீழ் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (04.07.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் இந்த பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...