கோவை கணபதி-சங்கனூர் சாலையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோவை கணபதி-சங்கனூர் சாலையில் 20 ஆண்டுகளாக இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவெடுத்தனர்.


Coimbatore: கோவை கணபதி பகுதியில் இருந்து சங்கனூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை (எண் 1638) இயங்கி வருகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எந்தவித தீர்வும் கிடைக்காத காரணத்தால், ஜூலை 4 அன்று திடீரென அந்த கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்றும் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...