கோவையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ.20.40 லட்சம் வருவாய்: செய்தி மக்கள் தொடர்புத் துறை தகவல்

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியை 1.44 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை வஉசி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கிய அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருள்காட்சியில், அரசின் 34 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட விளக்க அரங்குகள், பொருள்கள் விற்பனை, விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொருள்காட்சியைக் காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 என நுழைவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பொருள்காட்சியை 1.44 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்திருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை ஜூலை 3-ஆம் தேதி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...