கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவர் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் ஶ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திமுக சிறுபான்மை அணி தலைவர் ஆரோக்கிய ஜான் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இது 40/40 கழக வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்டது.


கோவை: கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் 6வது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்தது.



இந்த திருவிழாவின் போது, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கடந்த 8 தினங்களாக இரவு நேர உணவு வழங்கியதுடன், இன்று மதிய உணவு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து ஆரோக்கிய ஜான் பேசுகையில், "மதங்களை கடந்து மனிதனை நேசிப்போம் என்ற பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் சமூகநீதி பாதையில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னதானம் வழங்கப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீடுழி நலமுடன் வாழ்ந்து இனி வரும் காலங்களில் தொடர் வெற்றி பெற வேண்டும் என்றும், தமிழகத்தின் 40/40 கழக வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட நாட்களாக நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றும் வேண்டுகிறோம்," என்று தெரிவித்தார்.

"40 கோவில்களில் அன்னதானம் வழங்கி வருகின்றோம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம்," என்றும் ஆரோக்கிய ஜான் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி நாகராஜ், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பையன், கவுன்சிலர் வேலுமணி மூர்த்தி, 5 வந்து வார்டு துணை செயலாளர் சுந்திரராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...